Friday, 31 July 2026

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் மனிதநேய அடிப்படையில் இலங்கை அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து பல மில்லியன்  பெறுமதிவாய்ந்த பொருட்களை இனாமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (30) மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் R.முரளீஸ்வரன் தலைமையில் அபேக்சா நிறுவனத்தின் தலைவர் லயன் SK.குமார், மற்றும் அபேக்சா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கள் U.தேவகுமார், எந்திரி.த.மயூரன் மற்றும் நி.அனிஸ்டன் அத்துடன் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 D10 ஆளுனர் லயன் ஷாகிர் அகமட், முன்னால் ஆளுனர் லயன் லோகேந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றது. 

இவ்விழாவுக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் R.முரளீஸ்வரன் தலைமை தாங்கியதோடு புற்றுநோய் வைத்திய பிரிவின் பொறுப்பாளரும் வைத்திய ஆலோசகருமான வைத்தியர் A.இக்பால்  வரவேற்புரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து  நாள குழாய்களை கண்டுபிடிக்கும் இயந்திரம், சிறுநீர் இழக்கி மருந்து வகைகள், தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி குடிநீருக்குப் பாவிக்கும் பொறிமுறை கொண்ட இயந்திரங்கள் , சுவரில் மாட்டும் மின்விசிறிகள், சக்கர நாற்காலிகள் போன்ற பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறும்  நோயாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில்  பால் தேனீரும் சிற்றுண்டிகளும் வழங்கி வருகின்றன இந்த நிகழ்வு இன்றைக்கு நூறாவது நிகழ்வாகும் இதுவும் ஒரு சிறப்பு 

நிகழ்வின் இறுதியாக  புற்றுநோய் பிரிவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் தமது வைத்திய பிரிவுக்கு அன்பளிப்பு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும்  நன்றியை  தெரிவித்தார்

அத்தோடு குழந்தை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களிலும்  வழங்கி வைக்கப்பட்டது.










மட்டக்களப்பு மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் முயற்சியில் கந்தசாமி பிரபு MP தீவிரம் - தொடரும் முயற்சிகள்...

 மட்டக்களப்பு மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் முயற்சியில் கந்தசாமி பிரபு MP தீவிரம் - தொடரும் முயற்சிகள்...

​மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான திட்டங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களால் அண்மைக்காலமாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

​கடந்த காலங்களில் ஜனாதிபதி அவர்களுடனான சந்திப்புகளின் போதும் மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களால் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் (NWS&DB) குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, இதற்கான அனுமதி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
குறிப்பாக கோறளைப்பற்று வாழைச்சேனை காகித ஆலையின் (Valaichenai Paper Mill) நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பொறுப்பேற்றுப் பயன்படுத்துதல். ​அத்துடன் கட்டுமுறிவு குளத்தை குடிநீர் விநியோக ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் அனுமதி பெறுவதுடன் ​வாகனேரிக் குளத்தைப் பயன்படுத்துவதற்கும், குடிநீர் விநியோகத்திற்காக மாதுரு ஓயா நதியிலிருந்து மேலதிக நீரப் பெறுவதற்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையிடம் அனுமதி பெறுதல்.
அத்துடன் போரதீவுப்பற்றுப் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக, அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் ஹிமுத்துரு வேவாவிலிருந்து (Himuthuru Wewa) மேலதிக நீரைத் திருப்புதல் என்பவை முன்வைக்கப்பட்டு இப்பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வை எட்டும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நீர்வழங்கல் அதிகாரிகளுடனும், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அமைச்சருடனும், ஜனாதிபதியுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற அதேவேளை ​இத்தொடர் முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் உரிய நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 29 July 2026

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வார நிகழ்வுகள் தொடர்கிறது....

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வார நிகழ்வுகள் தொடர்கிறது....

 29.07.2026 இன்று 'மனித மாண்பு நிறைந்த நேர்மை மிக்க சமூகம்' என்னும் கருப்பொருளின் கீழ் ஆன்மிக,  அறநெறி, கலாசார, சமூக நேர்மையை மேம்படுத்தும் நாள் பிரகடனப்படுத்தப்பட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசால் மாணவர்களுக்கு நேர்மை மிக்க சமூகம் தொடர்பான எண்ணக்கருக்களுடன் சித்திர போட்டி, கட்டுரைப் போட்டி என்பன நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம்  தலைமையில் நடைபெற்றது இதன் போது தனதுரையில்   இன்றைய சிறுவர்களிடம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி எதிர்பார்க்கும் நெறிமுறை சார் சுத்தப்படுத்தலை பற்றியும் ஆழமாக எடுத்துரைத்தார். மேலும் இம் மாணவர்களுக்கு மனோஹரி விசேட திட்டத்தின் கீழ் பொறுப்புமிக்க மாணவர்களாவதற்கான மேலும்  தொகுதி ஒன்றும் உளவளத்துணை உத்தியோகத்தரால் நிகழ்த்தப்பட்டது.









Tuesday, 28 July 2026

50வது தேசிய விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தேக கட்டமைப்பு (Bodybuilding) போட்டி.....

 50வது தேசிய விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தேக கட்டமைப்பு (Bodybuilding) போட்டி.....

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய விளையாட்டு விழாவின் இவ் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட தேக கட்டமைப்பு போட்டிகள் (25) மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆதம், மாநகர சபை உறுப்பினர் மதன், அஸ்ரன் லிமிடெட் நிறுவனத்தின் பிரதநிதி லவன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக் காட்டினார்கள். 8 எடைப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பின்வரும் வீரர்கள் வெற்றிபெற்றுக் கொண்டனர்.
55kg பிரிவில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த Y இல்ஹாம், 60kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.கரன், 65kg பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த MLM.சபராஸ், 70kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த S.சுதர்சன், 75kg பிரிவில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.ஜிஜானந், 80kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த S நதீசன், 85kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த J.சவிதீரன், 90kg இற்கு மேற்பட்ட பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த V.கேதீஸ்வரன் ஆகியோர் முதல் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக நடைபெற்ற மிஸ்டர் மட்டக்களப்பு (MR.Batticaloa) பட்டத்துக்கான போட்டியில் இரண்டாம் இடத்தினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த MLM.சப்ராஸ் பெற்றுக் கொண்டார்
இவ் ஆண்டுக்கான மிஸ்டர் மட்டக்களப்பு (MR.BATTICALOA) பட்டத்தை ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.ஜிஜானத் பெற்றுக் கொண்டார்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் எதிர் வரும் மாதத்தில் நடைபெறும் கிழக்கு மாகாண மட்ட போட்டியில் பங்கு பெறுவார்கள்.









மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேர்மையான அரச சேவைக்கான 'நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்......

  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேர்மையான அரச சேவைக்கான 'நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்...... 

'நேர்மையான கலாசாரம் - சுத்தமான இலங்கை' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 'நேர்மை வாரம்' ஆரம்ப நிகழ்வு (27)  ஆரம்பமானது 

 பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்  தேசியக் கொடி ஏற்றப்பட்டு. தேசியக் கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 பிரதேச செயலாளர் தமதுரையில்  இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியன தற்போதைய அரசின் முதன்மையான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துதல் தலையாய நோக்கமாகும் என தெரிவித்தார்.

 உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன் அவர்களால் உறுதிமொழி வாசிக்கப்பட்டதற்கு இணங்க அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமானம் செய்து கொண்டனர். சமுர்த்தி தலைமையக முகாமையாளரின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது

 இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,   நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 









 

"சகோதரத்துவ தினம்" மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டது..........

 "சகோதரத்துவ தினம்" மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டது..........

சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு, இந்த 2026ம் ஆண்டு தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களிலும் கலை, இலக்கியச் செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விமர்சனங்கள், பாடல் கொண்டாட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, குறும்படப் போட்டிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

“ஒரு தொகை இதயங்கள் - ஒன்றினையும் ஒர் பிணைப்பு - ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
இதன் இறுதி நிகழ்ச்சி ஒரு பிரம்மாண்டமான கலை நிகழ்வாக நடத்தப்பட்டது.










Monday, 27 July 2026

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 'ரன்விமன' வீட்டுத்திட்டம் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

 மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 'ரன்விமன' வீட்டுத்திட்டம் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான 'ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் (திருப்பெருந்துறை, கல்லடி) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகவும்
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் சிறப்பு அதிதியாகவும் கலந்து வீடுகளை உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தனர்.
குறித்த பயனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூபாய் 10,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தலைமையக முகாமைமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...