மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 'ரன்விமன' வீட்டுத்திட்டம் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான 'ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் (திருப்பெருந்துறை, கல்லடி) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகவும்
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் சிறப்பு அதிதியாகவும் கலந்து வீடுகளை உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தனர்.
குறித்த பயனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூபாய் 10,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தலைமையக முகாமைமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








No comments:
Post a Comment