மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் சிறிகரன் எம்மை விட்டு பிரிந்தார்.....

 மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் சிறிகரன் எம்மை விட்டு பிரிந்தார்.....

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய வந்த சிறிகரன் அவர்கள் இறையடி சேர்ந்தார்.

ஆரம்ப காலம் முதல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவர் பல கிராமங்களிலும் கடமையாற்றி வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் தன் உயர் கல்வியை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கற்றவர். 

மிகவும் நகைச்சுவையாளரான இவரை நாங்கள் சுருட்டை சிறி என்று தான் அழைப்போம், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 03 சிறி என்கின்ற உத்தியோகத்தர்கள் கடமையாற்றியதால் இப்படி அழைப்போம். யாருடனும் சண்டைக்கு செல்லாத, நல்ல நட்புக் கொண்டவர். தன் வாயால் என்லோரையும் கட்டிப்போடுவர், தன் பணிவாக பேச்சால் தன் காரியங்களை முடித்த செல்பவர். தன்னால் முடிந்த வரை தன் சேவையை மக்களுக்காக அர்பணித்த ஒரு சேவையாளர்.

இவரது மனைவியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அன்னாரது மனைவி பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் உடலம் அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் வைக்கப்பட்டு நல்லடக்கம் இன்று 23.12.2025 (செவவ்வாய்) மாலை  4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Comments