சமுர்த்தி ''பிரஜா ஹரசர'' விருது வழங்களில் மட்டக்களப்பு மாவட்டம் .....
2023ம் ஆண்டிற்கான சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் ஒட்டியதாக நடாத்தப்பட்ட சமுர்த்தி தேசிய சம்மேளன ''பிரஜா ஹரசர'' தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
வலுவூட்டப்பட்ட நாடொன்றினை கட்டியெழுப்பும் தேசி பணிக்கு, சுய பலத்தினுடாக தோள் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் முன்னேற புது வழிகளை தேடி, கீழ் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரையில் அமைத்த சமுர்த்தி சமுதாய அடிப்படை மற்றும் பிரதேச அமைப்புக்களின் வளர்ச்சிகளையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சேவையையும் கௌரவிப்பதற்குமான 2023ம் ஆண்டுக்கான பிரஜா ஹரசர தேசிய விருது வழங்கும் நிகழ்வு (25) மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனதிபதி மற்றும் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ ரனில் விக்கிரமசிங்க அவர்களின் சார்பில் சமூக வலுவூட்டல் கௌரவ இராஜாங்க அமைச்சர் அனுப்ப பஸ்குவல் அவர்களின தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பலர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் அதிதிகளில் ஒருவராக கலந்து சிறப்பித்திருந்தார்.
கௌரவிக்கப்பட்டோர் விபரம் வருமாறு
சமுதாய அடிப்படை அமைப்பு: முதலாமிடம்
- பிரதேச செயலகம்: காத்தான்குடி
- சமுதாய அடிப்படை அமைப்பு: தலிபான்
- கிராம சேவகர் பிரிவு: 167/C
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: MH.பாத்திமா றிஸ்னா
- கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்: MS.முஹம்மட் நூர்தீன்
சமுதாய அடிப்படை அமைப்பு: இரண்டாமிடம்
- பிரதேச செயலகம்: வவுணதீவு
- சமுதாய அடிப்படை அமைப்பு: குறிஞ்சாமுனை
- கிராம சேவகர் பிரிவு: குறிஞ்சாமுனை
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: சிறிதரன் மாருதி
- கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்: கு.ஜெயக்குமார்
சமுதாய அடிப்படை அமைப்பு: மூன்றாமிடம்
- பிரதேச செயலகம்: ஆரையம்பதி
- சமுதாய அடிப்படை அமைப்பு: ஹிரா
- கிராம சேவகர் பிரிவு: செல்வாநகர் கிழக்கு
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: ALS.சியாமா
- கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்: செ.விஜயகுமரன்
பிரதேச அமைப்பு: முதலாமிடம்
- பிரதேச செயலகம்: செங்கலடி
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: திருமதி.மரியதாஸ்
- கௌரவிக்கப்பட்ட வங்கிச்சங்க முகாமையாளர்: செ.இராசலிங்கம்
- கௌரவிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்: நா.சசிகரன்
பிரதேச அமைப்பு: இரண்டாமிடம்
- பிரதேச செயலகம்: ஆரையம்பதி
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: திருமதி.சூரியகுமார்
- கௌரவிக்கப்பட்ட வங்கிச்சங்க முகாமையாளர்: திருமதி.கலைவானி
- கௌரவிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்: அ.சிறிதர்
பிரதேச அமைப்பு: மூன்றாமிடம்
- பிரதேச செயலகம்: கிரான்
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: திருமதி.நவேஸ்வரன் சந்திரவதனி
- கௌரவிக்கப்பட்ட வங்கிச்சங்க முகாமையாளர்: ம.பாஸ்கரன்
- கௌரவிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்: த.நித்தியகுமார்.
இளவயதினருக்கான அழகான செய்தி கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அணி:
- பிரதேச செயலகம்: ஏறாவூர் நகர்
- கௌரவிக்கப்பட்ட அணித்தலைவர்: ஹபீப் ரஹ்மான்
- சமுர்த்தி ஜன அபிமானி தொழில் முயற்சியாளர்: முதலாமிடம்
- பிரதேச செயலகம்: கிரான்
- கௌரவிக்கப்பட்ட முயற்சியாளர்: திருமதி.லோகேஸ்வரன் வசந்தகுமாரி
- கௌரவிக்கப்பட்ட கருத்திட்ட முகாமையாளர்: CI.திலீப்குமார்.
- கௌரவிக்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர்: M.பரசுராமன்
- கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்: P.ஜெயபிரகாஸ்
சமுர்த்தி ஜன அபிமானி தொழில் முயற்சியாளர்: இரண்டாமிடம்
- பிரதேச செயலகம்: களுவாஞ்சிக்குடி
- கௌரவிக்கப்பட்ட முயற்சியாளர்: பொ.அகிலன்
சமுர்த்தி ஜன அபிமானி தொழில் முயற்சியாளர்: மூன்றாமிடம்
- பிரதேச செயலகம்: வவுனதீவு
- கௌரவிக்கப்பட்ட முயற்சியாளர்: A.வின்சன்ட்
சர்வதேச புகைத்தல் உதிர்ப்பு கொடி வேலைத்திட்டம்:
- அதிகூடிய நிதியினை சேகரித்த சமுதாய அடிப்படை அமைப்பு: மினா
- பிரதேச செயலகம்: கோரளைப்பற்று மத்தி
- கௌரவிக்கப்பட்ட தலைவர்: ST.பைரூஸ்
- கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்:NM.ஹச் முஹம்மட்
- கௌரவிக்கப்பட்ட சமூக அபிவிருத்தி உதவியாளர்: AL.ஜயூப்கான்
இவர்களில் சமுர்த்தி ஜன அபிமானி தொழில் முயற்சியாளர்களுக்கு முறையே 25000/=, 15000/= மற்றும் 10000/= பணப்பரிசிலுடன், நினைவு சின்னமும், சான்றிதழும் வழங்கப்பட்டதுடன், மற்றைய அனைவருக்கும் நினைவுச்சின்னமும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment