கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு....

 கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் மட்/மமே/நாவற்காடு நாமகள்  வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு....

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் மட்/மமே/நாவற்காடு நாமகள்  வித்தியாலய நூலகத்திற்கு உயர்தர பெளதீக மற்றும் உயிரியல் பிரிவுகளுக்குரிய வளநூல்கள் மற்றும் கடந்தகால வினாத்தாள் தொகுப்பு நூல்கள் (11.07.2024) அன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் தற்போது அவ்வித்தியாலயத்தில் பெளதீக மற்றும் உயிரியல் பிரிவுகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இக்கருத்தரங்கின் போது மாணவர்களுடன் ஒவ்வொரு பாடத்தினையும் கற்பதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன.









Comments