கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி மட்டக்களப்பில்.......
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிடப் பயிற்சி நெறி (23,24) மட்டக்களப்பு மியானி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி.சாஜா வீரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தை சேர்ந்த வளவாளர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.





No comments:
Post a Comment