களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக சங்கத்தினை மறுசீரமைக்கும் கூட்டம்......
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக சங்கத்தினை மறுசீரமைக்கும் கூட்டம் (14)ம் திகதி களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் கே.ரகுபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை ஒன்றிணைத்து பிரதேச வர்த்தக சங்கம் மறுசீரமைக்கப்பட்டிருந்ததோடு, இலங்கை தரப்படுத்தல் நிறுவனத்துடன் கூட்டிணைந்து SLS தரச்சான்றிதழை வழங்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
இந் நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) எம்.ஏ.பார்த்திமா சலீமா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment