தேசிய சுபர் லீக் 4 நாட்கள் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிப்பு - யாழ். வீரர் தீசன் விதுசன் எந்த அணிகளிலும் இல்லை.....
தேசிய சுபர் லீக் 4 நாட்கள் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிப்பு - யாழ். வீரர் தீசன் விதுசன் எந்த அணிகளிலும் இல்லை.....
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடருக்கான குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கழக மட்ட போட்டிகளில் பிரகாசித்திருந்த வீரர்களைக்கொண்டு கண்டி, தம்புள்ள, கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற ஐந்து அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. இந்த 5 அணிகளின் தலைவர்களாக குசல் மெண்டிஸ் (கொழும்பு), தனன்ஜய டி சில்வா (யாழ்ப்பாணம்), நிரோஷன் டிக்வெல்ல (கண்டி), ரமேஷ் மெண்டிஸ் (காலி) மற்றும் கமிந்து மெண்டிஸ் (தம்புள்ள) ஆகியோர் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த இந்த தொடருக்காக மொத்தமாக 100 வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தெரிவு செய்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக யாழ். வீரர் தீசன் விதுசன் எந்த அணிகளிலும் இணைக்கப்படவில்லை. மூவர்ஸ் கழகத்துக்காக விளையாடிவரும் இவர், 8 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தேசிய சுபர் லீக் தொடரானது எதிர்வரும் 19ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதிவரை நடைபெறவுள்ளது. போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம், பி.சரா ஓவல், பல்லேகலை, தம்புள்ள, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாம்கள்:
கொழும்பு: குசல் மெண்டிஸ் (தலைவர்), திமுத் கருணாரத்ன (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, நிபுன் தனன்ஜய, ஹேஷான் தனுஷ்க, சரித் அசலங்க, நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷானக, அஷேன் பண்டார, மனோஜ் சரத் சந்ர, ரொஷேன் சில்வா, லக்சித மானசிங்க, கவிந்து நதீஷன், இஷ்த விஜேசுந்தர, கசுன் ராஜித, நுவான் பிரதீப், நிசால தார, கலன பெரேரா, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க
யாழ்ப்பாணம் : தனன்ஜய டி சில்வா (தலைவர்), சதீர சமரவிக்ரம (உப தலைவர்), நிஷான் மதுஷ்க, நவோத் பர்னவிதான, சுகிதா மனோஜ், கசுன் அபேரத்ன, ஜனித் லியனகே, மாதவ வர்ணபுர, அவிஷ்க தரிந்து, லஹிரு மதுசங்க, ரவிந்து பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், ஷிரான் பெர்னாண்டோ, கவிந்து பதிரண, எசான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ, ஜெப்ரி வெண்டர்சே, டிலும் சுதீர, சஞ்சுல பண்டார, சஷிக துல்ஷான்.
கண்டி: நிரோஷன் டிக்வெல்ல (தலைவர்), சாமிக்க கருணாரத்ன (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லசித் குரூஸ்புள்ளே, கசுன் அதிகாரி, தனுக தாபரே, ஓசத பெர்னாண்டோ, லஹிரு உதார, அஹான் விக்ரமசிங்க, ரவீன் யசஷ், சஹான் ஆராச்சிகே, லஹிரு குமார, அம்ஷி டி சில்வா, நிம்ஷார அத்தரங்கலே, மதீஷ பதிரண, நிபுன் ரன்சிக, லசித் எம்புல்தெனிய, அஷைன் டேனியல், வனுஜ சஹான், சச்சித்ர பெரேரா.
தம்புள்ள: கமிந்து மெண்டிஸ் (தலைவர்), மினோத் பானுக (உப தலைவர்), சஹான் நிமேஷ குணசிங்க, லியோ கேன் பிரான்சிஸ்கோ, கயான் மனிஷன், அபிசேக் லியனாராச்சி, டிலான் ஜயலத், லசித் அபேரத்ன, அஷான் பிரியன்ஜன், வனிந்து ஹஸரங்க, லஹிரு சமரான், சமிந்து விஜேசிங்க, சனோஜ் தர்ஷிக, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, அனுக் பெர்னாண்டோ, துவிந்து திலகரட்ன, லக்ஷான் சந்தகன், மலிந்த புஷ்பகுமார, துஷான் ஹேமந்த
காலி: ரமேஷ் மெண்டிஸ் (தலைவர்), சங்கீத் குரே (உப தலைவர்), ஹஷான் துமிந்து, லக்ஷான் எதிரிசிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, துலின டில்ஷான், விஷாட் ரந்திக, எல்.பி.பி.எம். குமார, தனன்ஜய லக்ஷான், கவிஷ்க அஞ்சுல, துனித் வெல்லாலகே, நிமேஷ் விமுக்தி, சுமிந்த லக்ஷான், டில்ஷான் மதுசங்க, திலங்க உதேசன், மிலான் ரத்நாயக்க, அசங்க மனோஜ், பிரவீன் ஜயவிக்ரம, கவுமால் நாணயக்கார.
Comments
Post a Comment