Friday, 31 July 2026

மட்டக்களப்பு மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் முயற்சியில் கந்தசாமி பிரபு MP தீவிரம் - தொடரும் முயற்சிகள்...

 மட்டக்களப்பு மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் முயற்சியில் கந்தசாமி பிரபு MP தீவிரம் - தொடரும் முயற்சிகள்...

​மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான திட்டங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களால் அண்மைக்காலமாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

​கடந்த காலங்களில் ஜனாதிபதி அவர்களுடனான சந்திப்புகளின் போதும் மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களால் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் (NWS&DB) குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, இதற்கான அனுமதி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
குறிப்பாக கோறளைப்பற்று வாழைச்சேனை காகித ஆலையின் (Valaichenai Paper Mill) நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பொறுப்பேற்றுப் பயன்படுத்துதல். ​அத்துடன் கட்டுமுறிவு குளத்தை குடிநீர் விநியோக ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் அனுமதி பெறுவதுடன் ​வாகனேரிக் குளத்தைப் பயன்படுத்துவதற்கும், குடிநீர் விநியோகத்திற்காக மாதுரு ஓயா நதியிலிருந்து மேலதிக நீரப் பெறுவதற்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையிடம் அனுமதி பெறுதல்.
அத்துடன் போரதீவுப்பற்றுப் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக, அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் ஹிமுத்துரு வேவாவிலிருந்து (Himuthuru Wewa) மேலதிக நீரைத் திருப்புதல் என்பவை முன்வைக்கப்பட்டு இப்பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வை எட்டும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நீர்வழங்கல் அதிகாரிகளுடனும், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அமைச்சருடனும், ஜனாதிபதியுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற அதேவேளை ​இத்தொடர் முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் உரிய நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...