Tuesday, 28 July 2026

50வது தேசிய விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தேக கட்டமைப்பு (Bodybuilding) போட்டி.....

 50வது தேசிய விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தேக கட்டமைப்பு (Bodybuilding) போட்டி.....

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய விளையாட்டு விழாவின் இவ் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட தேக கட்டமைப்பு போட்டிகள் (25) மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆதம், மாநகர சபை உறுப்பினர் மதன், அஸ்ரன் லிமிடெட் நிறுவனத்தின் பிரதநிதி லவன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக் காட்டினார்கள். 8 எடைப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பின்வரும் வீரர்கள் வெற்றிபெற்றுக் கொண்டனர்.
55kg பிரிவில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த Y இல்ஹாம், 60kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.கரன், 65kg பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த MLM.சபராஸ், 70kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த S.சுதர்சன், 75kg பிரிவில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.ஜிஜானந், 80kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த S நதீசன், 85kg பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த J.சவிதீரன், 90kg இற்கு மேற்பட்ட பிரிவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த V.கேதீஸ்வரன் ஆகியோர் முதல் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக நடைபெற்ற மிஸ்டர் மட்டக்களப்பு (MR.Batticaloa) பட்டத்துக்கான போட்டியில் இரண்டாம் இடத்தினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த MLM.சப்ராஸ் பெற்றுக் கொண்டார்
இவ் ஆண்டுக்கான மிஸ்டர் மட்டக்களப்பு (MR.BATTICALOA) பட்டத்தை ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த K.ஜிஜானத் பெற்றுக் கொண்டார்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் எதிர் வரும் மாதத்தில் நடைபெறும் கிழக்கு மாகாண மட்ட போட்டியில் பங்கு பெறுவார்கள்.









No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...