மழை தடுத்தாலும் KSC நடைபவணி தடைப்படவில்லை: கொட்டும் மழையிலும் கொட்டித்தீர்த்த பணமழை: பத்துலட்சத்தி ஜயாயிரத்தை கடந்த பணக்குவியல்: கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நடைபவணியில் மொத்தம் பத்துலட்சத்தி ஜயாயிரம் (1005000/=) சேர்க்கப்பட்டு ஒரு வரலாற்று சாதனையை கோட்டைமுனை விளையாட்டு கழகம் செய்து எல்லோர் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான உழைத்த அனைத்து கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்களுக்கும் மானமார்ந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ் நடைபவணி மூலம் சேகரிக்கப்படும் நிதியானது மட்டக்களப்பில் உள்ள சமூக அமைப்புக்களான ஹரி இல்லம், ஓசானம் இல்லம் மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் அமைப்புக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்து யாரும் எதிர்பார்க்க முடியாத மாபெரும் தொகையை வெறுமனே காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரையுள்ள 04 மணித்தியாலத்தில் அடை மழை கொட்டினாலும் தம் பணியை மிக கச்சிதமாக செய்து இமாலய சாதனை தொகையாகிய பத்துலட்சத்தி ஜயாயிரம் (1005000/=) ரூபாவை சேர்த்துள்ளது கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தினர். மழை குறுக்கிட்ட போதிலும் நடைபவணி தடைப்படுமா? என பலரும் வானுயர கேட்ட போதிலும் என்றுமே தான் முன் வைத்த காலை பின் வைக்காத கோட்டைமுனை விளையாட்டு கழகம் துவளாமல் தன் நடைபவணியை நேர்த்தியாக கொண்டு சென்று வெற்றியை கண்டது. இதில் முக்கிய விடயம் என்னவென்றபல் கோட்டைமுனை விளையாட்டு கழகம் தங்கள் குடும்பம் சகிதம் இவ் அர்பணிப்பான சேவையில் இணைந்து கொன்டது. அத்துடன் தன் கண்கவர் 50வது வருட சீருடையில் மற்றும் அழகான தம் நினைவு கூறும் தொப்பிகளுடன், எம்மவரின் வரலாறு கூறும் புகைப்படங்களும், எதிர்கால சிந்தனைகளுடன் சிறார்கள் புடை சூழ நடைபவணி தொடர்ந்தது. இதில் EPP சிறார்கள், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இளம் சிங்க வீரர்கள், EPP அமைப்பின் பெற்றோர்கள் மற்றும் எம் மூத்த அங்கத்தவர்களின் வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த கொட்டும் மழையில் இவ்வளவு பெரியதொரு தொகையை சேமித்தது மாத்திரமன்றி அதை உடனுக்குடன் வெளியிட்டு தம் வெளிப்படை தன்மையை நேர்மையாக காட்டி இருந்ததை பாராட்டி இருந்தார். வெறுமனே சாதாரனமாக நடைபவணி செல்பவர்கள் மத்தியில் ஒரு நல்ல விடயத்திற்காக பண சேகரிப்பில் ஈடுபட்டு தம் 50வது ஆண்டு நிகழ்வை வெற்றிகரமாக கொண்டாடும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தை தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். இதன் போது ஹரி சிறுவர் இல்லம், ஓசானம் இல்லம் மற்றும் உதயம் விழப்புலனற்றோர் அமைப்புக்களுக்கு தலா மூன்று லட்சத்தி முப்பத்தி ஜயாயிரம் ரூபாய் (3,35000/=) பெறுமதியான காசோலை வழங்கி வைக்கபட்டது. இவர்களுக்கான காசோலைகளை மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களும், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சின் ஸ்ரீகாந் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பயிற்றுவிப்பாளர் மலிங்க சுரப்புலிகே அவர்களாலும் வழங்கி வைப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளுக்கு கோட்டைமுனை 50வது வருட நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கபட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஹரி இல்ல இயக்குணர் சந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில் தாம் இப்படி ஒரு பெரிய தொகையை எதிர்பார்த்து இங்கு வரவில்லை என்றும் இது தமக்கு அதிர்ச்சியையும் இன்பத்தையும் தருவதாகவும், தற்போது ஹரி இல்லத்தில் 50 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வரும் காலத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகம் 50வது வருடத்தை கொண்டாட்ட நிகழ்வை நடாத்துவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்து, தாமும் முன்னைய காலத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்துடன் தன் நட்பை பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த அங்கத்தவரான புவனசிங்கம் வசீகரன் அவர்களுடன் தான் மட்டக்களப்பு மாநகர சபையில் பணியாற்றியதாகவும் நினைவு கூர்ந்தார். வெற்றிகரமாக முதல் வெற்றியை சுவைத்த கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் 50வது வருட இரண்டாம் நிகழ்வுக்கு இன்றிலிருந்தே தயாராகின்றது பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த கொண்டாட்டத்தை "கோட்டைமுனை நாமம் உலகெங்கும் பரவட்டும் கோட்டைமுனை மட்டக்களப்பின் ஓர் அடையாமாக திகழட்டும்".