Monday, 20 July 2026

மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் செட்டிபாளயம் "உவகை" இன் ஒரு வருட நிகழ்வும் கெளரவிப்பும்!

 மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் செட்டிபாளயம் "உவகை" இன் ஒரு வருட நிகழ்வும் கெளரவிப்பும்!

மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் மட்டக்களப்பு பிராந்திய நிலையமான செட்டிபாளயத்தில் இயங்கும் "உவகை" இன் ஒரு வருட நிகழ்வும் கெளரவிப்பு நிகழ்வு இன்று (20) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வு, பிராந்திய மனநல வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். டான் சௌந்தரராஜாவின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரனின் தலைமையில் நடை பெற்றது.
மனநலம் மற்றும் உள-சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றி வரும் செட்டிபாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை கௌரவிக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அடங்கலான 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரியும் மனநல சிகிச்சையாளருமான வைத்தியர் அனுசியா ஸ்ரீசங்கர், செட்டிபாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியர் கனகசிங்கம் அருள்யோதி, தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை பொறுப்பு வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், செட்டிபாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் சேவைகள் மற்றும் சாதனைகளை சுருக்கமாக விளக்கும் அறிமுகம் இடம்பெற்றதுடன் மனநல மேம்பாடு மற்றும் உள-சமூக தலையீடுகள் மூலம் நிறுவனத்தின் திறனை வலுப்படுத்திய பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...