Thursday, 27 November 2025

இலங்கையில் இயற்கையின் சீற்றத்தால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு....

 இலங்கையில் இயற்கையின் சீற்றத்தால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு....

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பெருமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,  சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்தச் சூறாவளிக்கு 'டித்வா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தீவிரமான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் விபத்துகள் காரணமாக இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 12,513 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 922 குடும்பங்களைச் சேர்ந்த 2443 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மொனராகலை, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களில் சிக்கி 14 பேர் காணமடைந்துள்ள நிலையில், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் பல பகுதிகளில் தொடர்கின்றன. அத்துடன் வெள்ளநீர் மற்றும் பலத்த காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...