கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்...........
கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்...........
கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன், பல்கலைக்கழகம் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.
கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அமைச்சின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் தொழிநுட்ப வளத்தை பயன்படுத்தி பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பித்தல், அதனை பிரபல்யப்படுத்தல், விஸ்தரித்தல், அரச திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் குறித்த கலந்துரையாடலின் பின்னர் கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் தொழிநுட்ப கூட செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Comments
Post a Comment