மட்டு மறை மாநில முன்னாள் ஆயர் யோசப் பொன்னையா வான்வீட்டில் சங்கமம் ஆனார்............
அதி வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா இன்று (19) அப்பூமியை விட்டு சென்றார்.
வாழ்க்கை குறிப்பு: பிறப்பு: 12 அக்டோபர் 1952) இலங்கைத் தமிழ் போதகரும், மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார்.
யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் பிறந்தார். புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார். திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
பணி வாழ்வு: யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்கப் பாதிரியாராகப் பணியிலமர்த்தப்பட்டார். இவர் பங்குப் பாதிரியாராக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார். மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்குப் பாதிரியாராகப் பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார். 2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Comments
Post a Comment