நீண்ட நாட்களின் பின் மட்டக்களப்பில் சிவானந்தா VS வின்சன்ட் பாடசாலைகள் மோதும் விவாத களம்.........
மட்டக்களப்பு நகரில் ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வரலாற்றில், ஒரு நீண்ட காலம் அதிபராகக்கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ.சாரங்கபாணி அவர்களின், 20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சாரங்கபாணி சொல்லாடல் களம் என்னும் பெயரினாலான விவாதப் போட்டியினை 30ம் திகதி ஆரம்பித்து தெரிவு காண் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தலைவர் மு.சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருமதி மிக்க இவ்விவாத கள நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக இந்துக்கல்லூரியின் கல்லூரியின் பழைய மாணவரும், தற்போதைய மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான N.தனஞ்செயன் கலந்து கொண்டு அரம்பித்து வைத்தார்.
தற்காலத்தில் கையடக்கபேசி, தொலைக்காட்சி, சினிமா, விளையாட்டு என பல்வேறு கேளிக்கைகளில் மாணவர்கள் செயற்படுவதால், தம் சிறந்த பேச்சாற்றலை அவர்கள் வெறுமனே வருடத்தில் ஒரு முறை தமிழ் தின போட்டிகளில் சில நிமிட பேச்சுக்காக ஓர் இரு தினங்களில் பேசி விட்டு மறந்து விடும் இக்காலத்தில், ஒரு மனிதனுக்கு சிறந்த ஆளுமை அவனது பேச்சு, அதன் கவர்ச்சி சொல்லாடல், ஏற்ற இறக்கம் இவற்றையெல்லாம் கற்றுக் கொடுப்பது ஒரு சிறந்த விவாத காளம் என்பதை உணர்ந்து, தற்காலத்திற்கு மாணவர்களுக்கு தேவையான ஒரு செயற்பாட்டை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரான, தழிழ் ஆசிரியருமான சாரங்கபாணி அதிபர் அவர்களின் 20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஆரம்பித்து வைத்துள்ளது பாராட்டத்தக்க விடயமாகும். இது தொடர வேண்டும் இது முடிவில்லா ஆரம்பமாக செல்ல வேண்டும்.
இச்சொல்லாடல் களம் போட்டியில் 08 பாடசாலைகள் மோதிக் கொண்டன இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளான சிவானந்தா தேசிய பாடசாலையும், வின்சன்ட் உயர்தர பாடசாலையும் மோதவுள்ளன. இது ஒரு நல்ல ஆரம்பம் எனவே இவ்விறுதி போட்டியானது 31 மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் M.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment