மட்டக்களப்பில் சக்தி TV யின் ஏற்பாட்டில், மாபெரும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா.................

 மட்டக்களப்பில் சக்தி TV யின் ஏற்பாட்டில்,   மாபெரும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா.................

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025 சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவதற்கான முன்னாயத் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று  (07) திகதி இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் சக்தி தொலைக்காட்சி நிறுவனம் இணைத்து புதுவருடத்தை வரவேற்பதற்கான கலைகலாசார, பாரம்பரிய விளையாட்டு மற்றும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்படும் இசை நிகழ்வுகள் என்பவற்றை ஒழுங்கு படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வில் கலாசார ஊர்வலம், சிறுவர்களுக்கான ஒவியப் போட்டிகள், பாரம்பரிய நடனம், தோணியோட்டம், படகு ஓட்டம், இருபாலாருக்குமான சைக்கிள் ஓட்டம், இசை நிகழ்வு என பல நிகழ்வுகள் மட்டக்களப்பு நகர் பகுதியிலும், களுதாவளை விளையாட்டு மைதானத்திலும் இடம் பெறவுள்ளது.

குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளர் குலேந்திரன், பிரதேச செயலாளர்கள்,  பொலிஸ் உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

Comments