கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு ........
கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்தில் 2025ம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தலைமையில் ''நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்'' எனும் தொனிப்பொருளில் இன்று (21) காலை 10.00 மணிக்கு வாகரை மத்திய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச மகளீர் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், அரச அதிகாரிகள், பங்குபற்றிய இந்நிகழ்வில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு, கலைநிகழ்வுகள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடன் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, சமகால டிஜிடல் உலகில் பாதுகாப்பான இணையப்பாவனையின் அவசியம் மற்றும் இணைய மோசடி குறித்த விழிபுணர்வும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரினால் ஆற்றப்பட்டது.
Comments
Post a Comment