கிளீன் சிறிலங்கா ஓந்தாச்சிமடம் - மகிழூர் பிரதான வீதியின் துப்பரவுப் பணிகள் முன்னெடுப்பு.....................
கிளீன் சிறிலங்கா ஓந்தாச்சிமடம் - மகிழூர் பிரதான வீதியின் துப்பரவுப் பணிகள் முன்னெடுப்பு.....................
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம், மகிழூர் பிரதான வீதியை துப்பரவு செய்யும் நிகழ்வு பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இன்று (06) இடம்பெற்றது.
மிக நீண்டகலமாக குறித்த வீதியின் இருமருங்குகளும் பற்றைக்காடுகளால் சூழப்பட்டிருந்த நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர். இதனை சீர்செய்யும் வகையில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பற்றகைள் வெட்டி அகற்றப்பட்டதுடன், துப்பரவு செய்யும் பணிகளும் இடம்பெற்றது.
இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் த.சபியதாஸின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபையின் செயலளார் எஸ்.சுபராஜன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், சமுர்த்தி முகாமையாளர் உதயகுமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.நவநாயகம் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது அப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் யுவதிகள், சமுர்த்தி பயனாளிகள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த வீதியின் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment