சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் இப்தார் நிகழ்வு.......
காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின மற்றும் இப்தார் நிகழ்வு (08) காத்தான்குடி கடற்கரை ரைய்யான் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் தலைமையில் இடம்பெற்ற "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளிலான நிகழ்வில் ஆய்வுக்கு மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி அனீஸா பிர்தெளஸ், வரவேற்புரை நிகழ்த்தியதுடன் மகளிர் தின சிறப்புரையை உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா வழங்கியனார்.
இதன் போது பெண்கள் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் சட்டத்தரணி ஏ.உவைஸ், இஸ்லாத்தின் பெண்கள் உரிமை தொடர்பில் அஷ்ஷேய்க எம்.எஸ்.எம்.நுஸ்ரி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்வில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment