பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றவில்லையா இது எப்படி இருக்கு......
(கடோ கபு) பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்ற மறுத்து அடாவடி செய்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும் வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment