விசேட தேவையுள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைப்பு...............

 விசேட தேவையுள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைப்பு...............

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விசேட தேவையுள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு செயற்கை அவயவங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலையில் (07) திகதி வழங்கி வைக்கப்பட்டது.
உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஸ்வரன் இணைப்பாக்கத்தில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
அவயங்கள் தேவைப்படுபவர்கள் குண்டகசாலைக்குச் சென்று அவய அளவீடுகளை வழங்கி வரும் நிலையில் அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக சென்டர் போ ஹன்டிகப் நிறுவனத்தினால் புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அளவீடுகள் பெறப்பட்டு தேவையுடைய நபர்களுக்கான புதிய அவயவங்கள் வழங்கப்பட்டது.
சென்டர் போ ஹன்டிகப் (Centre for Handicapped ) நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் அத்தநாயக்கவின் மேற்பார்வையில் அவயவங்களுக்காக சரியான அளவீடுகள் பெறப்பட்டு புதிய அவயவங்கள் இன்று பொருத்தி கையளிக்கப்பட்டன.
20 நபர்களுக்கான 20 செயற்கை கால் பொருத்துவதற்கு தேவையான இரண்டு மில்லியன் பெறுமதியிலான நிதியினை அவுஸ்திரேலியா அயிட் நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் சிரேஸ்ட தொழிநுட்ட உத்தியோகத்தர்களான சிசிரகுமார, ஆர்.என்.காளிதாசன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அமிர்தநாயகி, கஜந்தி சசிகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments