இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் 'கட்டிளமை பருவ யுவதிகளுக்கு கட்டிளமை பருவத்து உணர்ச்சிகளை சாதகமாக கையாளுதல்' தொடர்பான செயலமர்வு.............
இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் 'கட்டிளமை பருவ யுவதிகளுக்கு கட்டிளமை பருவத்து உணர்ச்சிகளை சாதகமாக கையாளுதல்' தொடர்பான செயலமர்வு.............
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் " எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2ம் திகதி தொடக்கம் 8 வரை தேசிய நிகழ்ச்சி திட்டமாக கொண்டாடப்படுகின்றது.
இதற்கமைய "ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு ஒரு பலம்" எனும் தொனிப்பொருளுக்கமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையிலும் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் (06) கட்டிளமை பருவ யுவதிகளுக்கு கட்டிளமை பருவத்து உணர்ச்சிகளை சாதகமாக கையாளுதல் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உள நல வைத்தியர் யூடி ரமேஷ் ஜெயகுமார் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார். அத்துடன் இந் நிகழ்வில் மாவட்ட செயலக சமூக பாதுகாப்பு சபை இணைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன், அவர்களால் ஆரக்சாவ மற்றும் சுரக்ம காப்புறுதி திட்டம் தொடர்பிலும் அதன் நன்மைகள் தொடர்பிலும் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment