மட்டக்களப்பு வாவிக்கரையோர அந்தோணியார் சிற்றாலயம் திறந்து வைப்பு.......
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியடிக்குடா செபஸ்தியார் ஆலய பங்கின் சிற்றாலயமான புனித அந்தோணியார் ஆலயம் அன்மையில் மக்கள் தரிசிப்பதற்காக அபிசேகம் செய்யப்பட்டு திறந்த வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டு இருந்த இவ்வாலயத்தை, புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை ஜேமஸ் அனிஸ்டன் மொராயாஸ் SJ அவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்புடன் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு புதுப்பொழிவுடன் அமைக்கப்பட்டது.
இவ்வாலயத்தை அன்மையில் மட்டக்களப்பு இயேசுசபை குழும மேளாளர் அருட்பணி T.சகாயசாதன் அவர்களால் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாலய அபிசேக நிகழ்வில் மூத்த இயேசு சபை துறவிகளான அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் இயேசு சபை துறவிகள் கலந்து சிறப்பித்ததுடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
தற்போது வாவிக்கரையோறம் ரம்மியமான காற்றுடன் வீற்றிருக்கும் பதுவை அந்தோணியாரை காண பலரும் சென்ற வண்ணம் உள்ளனர்.
Comments
Post a Comment