வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான்: ஆறாவது நாளாக கடற்படை இராணுவம் இணைந்து பணியில்........
(வரதன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக கிரான் பிரதேசத்தில் உருவான காட்டு வெள்ளம் தற்போது ஓரளவு குறைந்துள்ள போதிலும், இங்குள்ள மக்கள் இன்று காலை ஆபத்தான பாதையின் ஊடாகவே தங்களது பிரயாணங்களை மேற்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது.
தற்போது இப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதனால், இப்பகுதி விவசாயிகள் தங்களது துவிச்சக்கர வண்டிகளையும் முக்கிய அத்தியாவசிய உபகரணங்கள் உடமைகள் தோளில் சுமந்தவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது.
இருப்பினும் சிறுவர்கள், பெண்கள் நோயாளிகளின் நலன் கருதி இப்பகுதி ராணுவத்தினரின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளன.
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்து சேவை நிலையத்தினால் ராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்துகள் தற்போது படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் கிரான் தொப்பிக்கல கிரான் பாலம் ஊடான பிரதான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Comments
Post a Comment