செட்டிபாளையத்தில் திறந்து வைக்கப்பட்ட மதுபாவனை புனர்வாழ்வு மையம் ...................
(கடோ கபு) மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேசத்தில் ம் (17) உவகை நல்வாழ்வு மையம் எனும் நாமத்துடன் மதுபாவனைக்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளிக்கும் புனர்வாழ்வு மையம் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த புனர்வாழ்வு மைய திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சின் மனநல பணிப்பாளர் Dr.மகாதோதர அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பொது வைத்தியசாலை பணிப்பாளர் Dr.பு.சுகுணன் அவர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr.மு.கணேசலிங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் சமூக வைத்திய நிபுணர் Dr.சமந்தா அத்தோடு, மனநல வைத்திய நிபுணர்கள் Dr.T.கடம்பநாதன் மற்றும் Dr.Rகமல்ராஜ் மற்றும் உளநல மருத்துவர்கள் பிராந்திய மருத்துவர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் விளையாட்டுக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாவட்டத்தில் மதுவிற்கு அடிமையாகி அவதியுறுவோர் அதனிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் எமது உவகை புனர்வாழ்வு மையத்துடன் தொடர்பு கொண்டு இலவச புனர்வாழ்வு சிகிச்சை பெற்று பலனடையலாம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments
Post a Comment