கிரானில் வெள்ள பாதிப்பு கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை கடற்படையினர், இராணுவ உதவியுடன் சேவை.........................
கிரானில் வெள்ள பாதிப்பு கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை கடற்படையினர், இராணுவ உதவியுடன் சேவை.........................
(வரதன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளன.
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்து சேவை நிலையத்தினால் ராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்துகள் தற்போது படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் கிரான் தொப்பிக்கல, கிரான் பாலம் ஊடான பிரதான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடந்த 27/02 திகதியிலிருந்து பெய்துவரும் மழை காரணமாக சில கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்தினை பிரதேச செயலகமும், இராணுவமும் இணைந்து படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை 2025 இடைப்போக வேளாண்மை செய்கையும் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment