சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 320 மாணவர்களுக்கான உதவிகள்............

சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 320 மாணவர்களுக்கான உதவிகள்............
அமெரிக்காவில் உள்ள அன்பு நெறி அமைப்பின் நிதி அனுசரணையுடன், சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகத்துடன் இணைந்து எமது சமூகத்திற்கான பணி செயல்திட்டத்தில் ஒரு அங்கமான மாணவர்களுக்கான கல்வி திட்டம் 2025 வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டது.
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 320 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வினை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து நிகழ்வில் கலந்து கொண்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், பிரதேச செயலக கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவாநந்த பழைய மாணவர் சங்கம் சார்பாக உப தலைவர் S.ரவீந்திரன், நிர்வாக சபை உறுப்பினர் ஜெயராஜா மற்றும் பழைய மாணவர் சங்க பொருளாளர் பவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்பு நெறி அமெரிக்கா அமைப்பினருடன் இணைந்து 2வது தடவையாக இவ் செயல்பாட்டு நடாத்தப்படுகின்றது



Comments