மட்டக்களப்பில் மற்றுமொரு, இரத்தான நிகழ்வு மார்ச் 23ல்.....
மட்டக்களப்பு அமிர்தகழி கப்பலேந்தி மாதா ஆலயத்தின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்றை நடாத்தவுள்ளது.
தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இதை ஒரு இறை ஒறுத்தல் நிகழ்வாக நடாத்துவதுடன், தற்போது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய பங்குச்சபை தெரிவிக்கின்றது.
இவ்ரெத்தான நிகழ்வானது 23.03.2025 காலை 8.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது. உதிரம் கொடுத்து ஓர் உயிரை பாதுகாக்க உங்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்...........
Comments
Post a Comment