சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான 2ம் கட்ட நிதி வழங்கிவைப்பு.............

 சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான 2ம் கட்ட நிதி வழங்கிவைப்பு.............

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தரின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான 2ம் கட்ட நிதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரனினால் இன்று (10)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  மாவட்ட   அனர்த்த முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர் இரு சிருநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார். இரவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான  நிதி உதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஏற்பாட்டில் நண்பர்களின் நிதிப் பங்களிப்பில் 2ம் கட்ட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிதி கையளிக்கும் நிகழ்வின்போது நிர்வாக  உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவிநிலை உதவியாளர் எம்.றிழா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Comments