மட்டக்களப்பில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு .......................
மட்டக்களப்பில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு .......................
(வரதன்) இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21) நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் நினைவு கூறப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயசூரிய சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற நிகழ்வின் கீழ் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர ஆலோசனையின் கீழ் தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களை நினைவு கூறும் நிகழ்வாக தேசிய ரீதியில் வருடந்தோறும் மார்ச் மாதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நினைவு கூறும் நிகழ்வானது, கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொலிஸ் திணைகள் கொடியேற்றப்பட்டு இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவுகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர விசேட உரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்டனர்.
1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் கிழக்கு மாகாணத்தில் 417 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment