தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி 150வது ஆண்டு...................
மட்டக்களப்பு, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி 150வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகளை நடாத்த பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி 1875 இல் REv.Fr.பிரான்சிஸ் சேவியர் (OMI) அவர்களினால் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இக் கல்லூரி 2025ம் ஆண்டு 150வது கல்லூரி தினத்தை முன்னிட்டு முதல் நிகழ்வாக இரத்ததான முகாம் எதிர்வரும் 13.03.2025 (வியாழக்கிழமை) காலை 8.00 மணி தொடக்கம் கல்லூரி மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இவ்ரெத்தான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர் காக்குமாறு கேட்டு நிற்கின்றது.
Comments
Post a Comment