EP - ''91'' Batch கௌரவிப்பு நிகழ்வு................

EP - ''91'' Batch கௌரவிப்பு நிகழ்வு................

இலங்கை மதுவரித்திணைக்களத்தில் 1991ம் ஆண்டு  கிழக்கு மாகானத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்து ஓர் கௌரவிப்பு நிகழ்வை  களுவாஞ்சிக்குடி தனியார் விடுதியில் (14)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற மற்றும் தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் கெரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும், விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அவர்கள் குறிப்பிடுகையில், நாங்கள் கிழக்கு மாகானத்தில் இருந்து தமிழ் உத்தியோகத்தராக 1991ல் மதுவரித்திணைக்களத்தில்  இணைந்து கொண்டதால், எம் அனைவரையும் ஒன்றினைப்பதற்காக EP - ''91'' Batch  என பெயர் சூட்டி சில வருடங்கள் இந்நிகழ்வை நடாத்தி வந்துள்ளோம், அதன் ஒரு பகுதியாக இம்முறையும் இனைந்துள்ளோம். இனி வரும் காலங்களில் சிறு சிறு மாற்றத்துடன் பயணிக்கவுள்ளதாக ஊவா மற்றும் வடக்கு (1+2) மாகானத்திற்கு பொறுப்பான உதவி மதுவரி ஆணையாளர் செ.ரஞ்சன் தெரிவித்தார்.








Comments