மட்டக்களப்பு இப்பெயரை தம் உடம்பில் நிரந்தரமாக பதித்த வெளிநாட்டவர்: வைரலாக புகைப்படம்................

 மட்டக்களப்பு இப்பெயரை தம் உடம்பில் நிரந்தரமாக பதித்த வெளிநாட்டவர்: வைரலாக புகைப்படம்................

மட்டக்களப்பு எனும் பெயருக்கு எத்தனை மதிப்புன்டு என்பதை இச் செய்தியில் நீங்கள் பாருங்கள். அன்மையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணி மட்டக்களப்பிற்கும் தன் பயணத்தை தொடர்ந்தார். 

இதன் போது இவரது கையில் 'மா'  எனும் தமிழ் எழுத்து தனியே பொறிக்கப்பட்டதை அவதானித்த அ.நிதான்சன் எனும் இளைஞன் அவருடன் உரையாடிய போது,  அந்த சுற்றுலாப்பயணி தனக்கு இலங்கையில் பிடித்த இடம் மட்டக்களப்பு, ஹட்டன், காலி ஆகிய மூன்று இடங்களாகும், அந்த மூன்று இடங்களையும், தமிழ் எழுத்துக்களால் தம் கைகளில் பொறித்துள்ளதாகவும் கூறினார், இதன் போது அதிர்ச்சி அடைந்த நிதான்சன் இன்னுமொரு செய்தியும் காத்திருந்தது  ஒரு நர்த்தன விநாயகரும், அதனை சின்னப் பிள்ளையார் எனக் குறித்து,  எம்பெருமான் நடராஜர் கோலத்திலும் பச்சையாக (Tattoos) குத்தியுள்ளதாக தெரிவித்து தன் கைகளை காட்டினார்.  இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் மட்டக்களப்பு மண் எத்துனை பெயர் பெற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். 

Comments