மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு............
மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு............
2025.02.08 சுவாமி விபுலானந்தா இசைநடன கல்லூரி இராஜதுரை அரங்கில் புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி குகதாஸ் தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பயிற்சி நிலையத்தில் NVQ தரத்தில் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அழகுக்கலை, கணனி பயிற்சி, விவசாயப்பயிற்சி மற்றும் தையல் பயிற்சி ஆகியவற்றிற்கான சான்றிதழ்களும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment