கொம்மாதுறையில் யானைத்தாக்குதல்: ஆசிரியரின் வீடு பாரியளவில் சேதம்............
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள செங்கலடி மத்தியகல்லூரி ஆசிரியரான அருளானந்தம் சூரியகாந்தன் என்பவரது வீடு யானைத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளரின் தாயார் சின்னத்தம்பி செல்வம் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்திருக்கவில்லை. இருந்த போதிலும் வீட்டின் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வீடு கிட்டத்தட்ட பாரியளவில் சேதமானதுடன், வீட்டில் இருந்த ஆறு மூடை நெல், ஒரு மூடை அரிசி, வீட்டுத்தளபாடங்கள் உட்பட நீர் இறைக்கும் இயந்திரம், விவசாய உபகரணங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களில் யானைகளின் தாக்கம் என்பது அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. இதனால் பலதரப்பட்ட மக்களும் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
.
Comments
Post a Comment