பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் ரன் விமான ஜெய விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு..............
மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகப் பிரிவில் முனைக்காடு மேற்கு, அம்பிளாந்துறை, அம்பிளாந்துறை வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் வழங்கப்பட்ட ரன்விமான, ஜெயவிமன வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கட்டது.
இந் நிகழ்வானது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ் சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொக்கட்டிசோலை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் பி.துரைராஜ சிங்கம், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ருசகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ. ஆர்த்தி, பிரிவு உத்தியோகத்தர் அகிலேஸ்வரன், அபிவிருத்தி உத்தியத்தர் திவா மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment