பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்-நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை...............
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment