மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..............
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன். நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது,
நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து போலிசாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
Comments
Post a Comment