எமது அரசாங்கத்தினால் மக்களுக்கான நிதி வீணடிப்புற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது -பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.......
எமது அரசாங்கத்தினால் மக்களுக்கான நிதி வீணடிப்புற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது -பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.......
(வரதன்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது தேர்தல் வெற்றி நோக்காக கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 122 கோடி ரூபாய்கள் கடந்த கால அரசாங்கத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப் பட்டிருந்தது, எமது அரசாங்கத்தினால் இதற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்கடந்த கால அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரகலை போராட்டத்தின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் சேதமாக்கப்பட்டது என மதிப்பீடுகள் செய்யப்பட்டு 122 கோடிகள் ரூபாய்கள் கடந்த கால அரசாங்கத்தினால் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டிருந்தது. கடந்த கால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாறான தேர்தல் வெற்றியை நோக்காக கொண்டு இந்த நிதி வழங்கி இருந்தனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மக்கள் கஷ்டப்படுகின்ற காலங்களில் இவ்வாறான பெரிய தொகைகளை வழங்கி மக்களின் வரிப்பணத்தை இவர்கள் வீணடித்திருக்கின்றார்கள்
இவ்வாறான செயற்பாடுகளை எமது அரசாங்கம் ஒரு போதும் முன்னெடுக்காது, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இதற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இவ்வாறான வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும், இவர்களை மக்கள் இனம் கண்டு இவர்களை நிராகரிக்க வேண்டும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்
We must not go with our stained hands when we seek the assistance of the law.
ReplyDelete