சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் கௌரவிக்கப்பட்டார்.............

 சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் கௌரவிக்கப்பட்டார்.............



40 ஆண்டுகாலமாக ஊடகதுறை, இலக்கியதுறை, அரசியல்துறை, சமூகப்பணிகளுக்காக அயராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் அவர்களை காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவினால் உயர் விருது வழங்கி கௌரவித்தது.

காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அறபுக்கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்களால் விருது வழங்கி கௌரவிவித்தார்.

காத்தான்குடியில் தம்பிலெப்பை, செய்னம்பு தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர், காத்தான்குடி அந்-நாசார் மகா வித்தியாலயம், காத்தான்குடி தேசிய பாடசாலை, ஏறாவூர் தேசிய பாடசாலை, பொல்கொல்லை தும்பரை வளாகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரின் மனைவி பாத்திமா ஜவ்பர்கான். இத்தம்பதியினருக்கு அஹமட் ஜுறைஸ் ஜவ்பர்கான், அஹமட் ஜுமைல் ஜவ்பர்கான் ஆகிய இரண்டு புதல்வர்கள் உளர்.

ஊடகத்துறை டிப்ளோமா பட்டதாரியான இவர், தற்போது முழு நேர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் முதல் படைப்பு 1982ல் தினகரனில் ஒரு கவிதையாக இடம் பெற்றது. இதிலிருந்து இன்று வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சிறுகதைகள், காவியங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும், இந்திய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இந்நிகழ்வில் ஸாலிஹ் மத்ரஸா அதிபர் அல்ஹாஜ் எஸ்.எல்..எம்.அஸார் மௌலவி, ஆலிம்களுக்கான வழிகாட்டலுக்கும், ஆலோசனைக்குமான அமைப்பின் தலைவர் அல்ஹாபிழ், அஷ்ஷெய்க் ஷாஜஹான், கதீப்மார் சம்மேளன செயலதிபர் அஷ்ஷெய்க், சிரேஸ்ட ஊடகர் எஸ்எம்எம்.முஸ்தபா பாலாஹி ஆகியோரும் கலந்து கொண்டனர் .

Comments