வடமாகாண பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்.............

 வடமாகாண பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்.............

வடமாகாண பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் விளையாட்டுதுறை அமைச்சினால் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில் குமார் கமகே அவர்களின் தலைமையில் வடமாகாண பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் சிறப்புற இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்ற கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் முன்மொழிவினை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கே.படேபொல அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அதிதிகளின் உரைகளினை தொடர்ந்து கிரிக்கெட் உபகரணங்கள் பாடசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும், மாவட்ட ஊடகப்பிரிவு உள்ளடக்கியதாக தெரிவுசெய்யப்பட்ட 47 பாடசாலைகளுக்கு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments