மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்கள் தங்கள் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.......
மட்டக்ளப்பு மாவட்டத்தில் சில பிரதேச செயலாளர்கள் இன்று (03) தங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிவப்பிரியா வில்வரெட்னம் தம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார், இவர் கடந்த காலத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் யு.உதயஸ்ரீதர் அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி இருந்தார்.
காத்தான்குடி பிரதே செயலகத்தில் நிஹாறா மௌஜூத் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த காலங்களில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரா கடமையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
Comments
Post a Comment