அக்கினியில் சங்கமமாகிய காசியின் உடல்.......
மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரும், வினியோகத்தருமான அமரர் சண்முகம் காசிப்பிள்ளையின் உடல் (06) ஆகிய இன்று அக்கினியில் சங்கமமானது. இவரது உடலுக்கு இவரது மகன் காசிப்பிள்ளை சதீசன் அவர்கள் சிதைக்கு தீ மூட்டினார்.

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட சண்முகம் காசிப்பிள்ளை 1976ம் ஆண்டில் மட்டக்களப்பிற்கு தன் 05 சகோதரர்களுடன் காலடி எடுத்து வைத்திருந்தார். சுமார் அரை நூற்றாண்டு காலமாக மட்டக்களப்பில் வாழ்ந்த இவர், தான் இறந்தாலும் தன்னை மட்டக்களப்பில் தான் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு மட்டக்களப்பில் இவர் மக்களின் மனங்களில் வேறூன்றி இருந்ததற்கு இன்றைய இறுதி ஊர்வலமே சாட்சியாக இருந்திருக்கும்.
மக்களப்பில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் அக்கறை கொண்ட இவர் பலரை தேடிச்சென்று உதவி செய்து விட்டு சர்வ சாராணமாக இருந்து விடுவார். விளையாட்டில் இவருக்கு உதைபந்தாட்டம் மிகப்பிடித்த விளையாட்டாகும் இதற்காக பல போட்டிகளை அவரே முன்னிற்று நடாத்தி இருந்தார்.
மட்டக்களப்பில் மிகபெரிய வர்த்தகரான இவரிடம் தற்போதும் 100 மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றார். இவரின் உதவியுடன் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றால் அது தான் உண்மை.
இவரது இறுதி நினைவேந்தலில் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து செல்வராசா, சேலான் வங்கி முகாமையாளர் திருமதி.இளங்கோ, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி செ.ரஞ்சன், வேல்முருகன் டிஸ்டிபீயூட்டஸ் நிறுவனத்தின் முகாமையாளர் அன்டன் கபிரியல், கதிரவன் பட்டிமன்ற பேரவையின் உறுப்பினா திரு.இன்பராசா, யுனிலிவர் நிறுவனத்தின் பிரதிநிதி தீபால் விக்கிரமசிங்க சினேக உறவுகள் ஒன்றுகூடல் அங்கத்தவர் திரு அமிர்தலிங்கம் என பலரும் தங்கள் இரங்கல் உரையை நிகழ்த்தி இருந்தனர்.
இவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர், இதன் போது பாண்ட் வாத்திய முழக்கத்தோடு இவரது உடலம் தகனத்திற்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அக்கினியில் சங்கமம் ஆனது.
Comments
Post a Comment