போரதீவுப்பற்றில் வீதியில் இறந்த நிலையில் கானப்பட்ட முதலை...........
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகாமையில் இன்று (27 ) வாகன விபத்தில் இறந்த நிலையில் 8அடி நீளமுடை முதலை இனங்கானப்பட்டன.
குறித்த முதலை இன்று(27) அதிகாலை குளத்தில் இருந்து வீதி ஊடாக வரும் போது வாகனத்தினால் அடிபட்டு இறந்துள்ளன. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஊழியர்களினால் ரக்டர் வாகன உதவியுடன் ஏற்றிச் சென்று புதைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட சிறிய குளங்களில் இருந்து முதலைகள் பல அண்மைக் காலமாக காணப்பட்டன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல முதலைகள் குளங்களில் இருந்து இரவு நேரங்களில் வீதிக்கு வருவதனால் பொதுமக்கள் கவனமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
Comments
Post a Comment