மட்டக்களப்பு மாநகர சபை அதிரடி உத்தரவு: கட்டாக்காலி மாடுகளுக்கு ஆப்பு.....
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிராபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே மாநகர எல்லைக்குள் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் எதிர்வரும் 19.02.2025 காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெறும்.
இக் கூட்டத்தின் பின் இனிவரும் காலங்களில் கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் அலைந்து திரிந்தால், எதிர்வரும் 23.02.2025 முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மட்டக்களப்பு மாநகர சபை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மட்டக்களப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
(வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள் மாநகரசபையால் கையகப்படுத்தப்படும்.)
Comments
Post a Comment