தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேக நிகழ்வு மகா சிவராத்திரி தினத்தன்று நீங்களும் கலந்து கொள்கின்றீர்களா...................

 தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேக நிகழ்வு மகா சிவராத்திரி தினத்தன்று நீங்களும் கலந்து கொள்கின்றீர்களா...................

மகா சிவராத்திரி தினமாகிய 26.02.2025  அன்று  மட்டக்களப்பு, தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேகம் காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற உள்ளது. 

அந்த வகையில்  சித்தர்களால்  ஆலயத்திற்கு தரிவிக்கப்பட்ட உயிர்லிங்கத்துக்கு பக்தர்கள்  கைகளினால் ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு பால புஷ்கரனிலிருந்து தீர்த்த நீர் எடுத்து வந்தும் உங்களது ராசிக்கு ஏற்ற வகையிலும் அபிஷேகம் பண்ணலாம்

ராசி  அபிஷேக பொருள், மேஷராசி  வெல்லம் கலந்த நீர், ரிஷபராசி   தயிர், மிதுனராசி   கரும்பு சாறு, கடகராசி சர்க்கரை சேர்ந்தபால், சிம்மராசி   பால், கன்னிராசி  பால் அல்லது நீரால், துலாம்ராசி  பால், விருச்சகராசி தேன் அல்லது சர்க்கரை  நீரால், தனுசுராசி   குங்குமப்பூ கலந்தபால், மகரராசி  நல்லெண்ணெய், கும்பராசி இளநீர் அல்லது கடுகு எண்ணெய், மீனராசி குங்குமப்பூ பால்.    

அன்றைய தினம் லிங்கோத்பவ காலத்தில் இடம் பெற இருக்கும்.  ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி கலந்து கொண்டு வேள்வியின் போது, உங்கள் கைகளினால் ஆகுதிகளும் இடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது .

எனவே அரிய நிகழ்வில் கலந்து கொண்டு அருள் பெற்றேகுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர் . 

Comments