ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம் நால்வருக்கு விளக்கமறியல்: மேலும் இருவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவு..............
ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம் நால்வருக்கு விளக்கமறியல்: மேலும் இருவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவு..............
மட்டக்களப்பு, ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு 4 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (24) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Comments
Post a Comment