மாபெரும் இரத்தான நிகழ்வு.....
மட்டக்களப்பு, பாலமீன்மடு புதுமை மிகு குழந்தை இயேசு ஆலயத்தின் பங்குச்சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து நடாத்த திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 5ம்திகதி முதல் தவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இதை ஒரு இறை ஒறுத்தல் நிகழ்வாக நடாத்துவதுடன், தற்போது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய பங்குச்சபை தெரிவிக்கின்றது.
இவ்ரெத்தான நிகழ்வானது 16.03.2025 காலை 9.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது. உதிரம் கொடுத்து ஓர் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க உங்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள் பாலமீன்மடு புதுமை மிகு குழந்தை இயேசு ஆலயத்தின் பங்குச்சமூகத்தினர்.
Comments
Post a Comment