வாழைச்சேனையில் அருகி வரும் பாரம்பரிய போஷாக்கு உணவுகள் பற்றிய விழப்புனர்வு கண்காட்சி..............

 வாழைச்சேனையில் அருகி வரும் பாரம்பரிய போஷாக்கு உணவுகள் பற்றிய விழப்புனர்வு கண்காட்சி..............

வாழைச்சேனையில் அருகி வரும்  பாரம்பரிய போஷாக்கு உணவுகள் பற்றிய விழப்புனர்வு உணவுக்கண்காட்சி நிகழ்வானது கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் கண்ணகிபுரம் லயன்ஸ் கிலப் மண்டபத்தில் (28) இடம் பெற்றது.

 இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

கோறளைப்பற்று  பிரதேச செயலகம், வேள்ட் விசன் மற்றும்  வாழைச்சேனை சுகாதார வைத்திய ஆகியன  இணைந்து 'ஆரோக்கியமான உணவு எமது உரிமை '  எனும் தொணிப்பொருளில் இவ் உணவு காட்சி இடம் பெற்றது.

எமது பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மீண்டும் பயன்படுத்தி  ஆரோக்கியமான  நோயற்ற வாழ்வை வாழ்வதற்கு  விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் நவீன  உலகில் துரித உணவை உட்கொள்வதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், எமது இளம் பராயத்தினருக்கு ஆரோக்கியமான  சிறுதானிய உணவு வகைகளை வழங்க வேண்டியது எமது கடமையாகும் என்றார்.

வேள்ட் விஷன் நிறுவனத்தினால்  இலங்கையில்  சிறுவர்களின் பசியை  முடிவுக்குக் கொண்டு வருவதற்கு  மாவட்டத்தில்  உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்குமான பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. போஷாக்கான உணவு நீண்ட ஆரோக்கியத்தை வழங்குவதனால் சிறந்த ஆளுமை மிக்க  சந்ததியினரை உருவாக்க முடிகின்றது.

புதிய மாவட்ட செயலக கட்டிடம் பற்றி அறிந்து கொள்வோம்: இதையும் கடந்து செல்வோம்.......

 இந் நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று மக்களினால் இப் பிரதேசத்தில் குறைபாடாக காணப்படும் சுகாதார பரிசோதகர், பொது சுகாதார தாதியர் உத்தியோகத்தர்  மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது  ஆகிய வெற்றிடங்களுக்கு உரிய உத்தியோகத்தர்களை நியமித்து தருமாறும் அரசாங்க அதிபருக்கு  இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன், வேள்ட் விஷன் நிறுவன  உத்தியோகத்தர்கள்  என பல உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Comments